Advertisement

மதுரையில் 47 பேருக்கு கொரோனா : வதந்தி 'பரப்பியவர்' கைது

பொது மார்ச் 18,2020 | 00:00 IST

Share

மதுரை, கருப்பாயூரணியை அடுத்த ராஜாக்கூரில் உள்ளது குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி. இங்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 47 பேரை, தனிமையில் தங்கவைத்து சிகிச்சை அளித்து வருவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, இதுபோன்ற தவறான வதந்தியை பரப்பியது யாரென, போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். சமூக ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, மத்திய சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X