விளையாட்டு மார்ச் 18,2020 | 18:30 IST
'யூரோ' கோப்பை ஒத்திவைப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. 16வது தொடர் வரும் ஜுன் 11 முதல் ஜூலை 11 வரை, லண்டன், ரோம் உள்ளிட்ட 12 இடங்களில் நடப்பதாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் ஜூன் 21 முதல் ஜூலை 21 வரை போட்டிகள் நடக்கும். ................ சச்சின் வேண்டுகோள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறுகையில்,'' இந்திய நாட்டு மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு, எளிதான முறைகளை பின்பற்றுவது அவசியம். இதன் மூலம், பாதுகாப்புடன் இருக்க முடியும்,'' என்றார். ............... பிரெஞ்ச் ஓபன் மாற்றம் நடப்பு ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மே 24ல் துவங்க இருந்தது. பல்வேறு நாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க இருப்பதால், கொரோனா பரவலாம் என அச்சம் ஏற்பட்டது. இத்தொடர் வரும் செப்டம்பர் 20ம் தேதி துவங்கி அக்டோபர் 4 வரை நடக்கும் என அறிவிக்கப்பபட்டுள்ளது. ........... பெய்ன் ஆதரவு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பெய்ன் கூறுகையில்,'' கொரோனா வைரஸ் காரணமாக, பல போட்டிகள் ரத்தாகின்றன. பல தொடர்களில் கோப்பை வெல்ல முடியவில்லை என வீரர்கள் ஏமாற்றம் அடையலாம். ஆனால், கிரிக்கெட்டை விட கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வதே பெரிய விஷயம்,'' என்றார். ...............
வாசகர் கருத்து