பொது மார்ச் 19,2020 | 00:00 IST
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நடுப்பட்டி கொங்கும் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர், ஒரு வாரத்திற்கு முன், சமூக வலைதளங்களில், கொரோனா வைரஸ் குறித்து தவறான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மற்றும் கோவையில் உள்ள பிராய்லர் கோழி,ஆட்டுக்கறி கடைகளில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பதை, அரசு டாக்டர்கள் உறுதி செய்ததாக, தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இந்த பதிவினை பார்த்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன், வதந்தி பரப்பிய வெங்கடாசலத்தை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து