பொது மார்ச் 19,2020 | 20:15 IST
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அயர்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த அந்த 21 வயது மாணவன் அவரது வீட்டிலேயே தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுவரை வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 236 பேருக்கு சோதனை செய்தோம்; அவர்களில் 3,481 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்றார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் நான்காவதாக ஒருவர் இறந்துள்ளார். இவர் பஞ்சாபை சேர்ந்தனர். ஏற்கனவே கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து