விளையாட்டு மார்ச் 19,2020 | 20:30 IST
கடந்த 2008ல் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட், சிட்னியில் நடந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சைமண்ட்சை, இந்திய சுழல் வீரர் ஹர்பஜன் 'குரங்கு' என திட்டினார் என சர்ச்சை வெடித்தது. இவ்விஷயத்தில் ஹர்பஜனுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த இந்தியா தொடரில் இருந்து விலகுவோம் என மிரட்டியது. இதுகுறித்து அப்போதைய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,'' கடந்த 2008ல் சிட்னி சம்பவம் எதுவும் எனது கட்டுப்பாட்டில் இல்லை. இதுதான் எனது கேப்டன் பணியில் நடந்த சோகமான நிகழ்வு,'' என்றார்.
வாசகர் கருத்து