Advertisement

கொரோனா' பாதுகாப்பற்ற நிலையில் பெல் ஊழியர்கள்

பொது மார்ச் 20,2020 | 00:00 IST

Share

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் உள்ளது. இங்கு நிரந்தர பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 8,500 பேர் பணியில் உள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள். இங்கு, கொரனோ குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெயரளவில் மட்டுமே செயல்படுவதாக ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பணியின் காரணமாக பல மாநிலங்களுக்கு ஊழியர்கள் சென்று வருகின்றனர். அந்த ஊழியர்கள், நிறுவனத்திற்குள் வரும் போது, பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு நுழைவாயிலிலும் தெர்மா மீட்டர் வைத்து சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே பணிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் இருந்து நிறுவனத்திற்கு உள்ளே வரும் கனரக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பதில்லை. நிறுவனத்தின் விழிப்புணர்வற்ற தன்மையால், கொரோனா வைரஸ் பரவும் அச்சம் உள்ளதாக, ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கேட்பதற்காக, அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X