பொது மார்ச் 20,2020 | 00:00 IST
பொள்ளாச்சி வடக்கிபாளையம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 2 கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. சினிமா பாணியில் போலீசார் அந்த கார்களை சேஸ் செய்து மடக்கி பிடித்தனர். கார்களில் வந்த மூவரை பிடித்து விசாரித்தபோது, உளறியுள்ளனர். ஒரு காரில் இருந்த பெட்டியில் 6 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. இரு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், அதில் வந்த கேரளாவை சேர்ந்த முகமது தன்சீர் செரீப் மற்றும் நசீர் ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து