Advertisement

கொரோனா வைரஸ் தடுக்க பஸ்ஸுக்கு வேப்பிலை

பொது மார்ச் 22,2020 | 00:00 IST

Share

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக கோவை காந்திபுரத்தில் இருந்து செம்மேடு வரை செல்லும் தடம் எண் 14ல் இயங்கும் பேருந்து முழுவதும் வேப்ப இலைகளை கட்டி இயக்கி வருகின்றனர். கிருமி நாசினியாக பயன்படும் வேப்பிலை மற்றும் துளசி இலைகளை பேருந்தின் உள்ளேயும், வெளியேயும், கட்டிவிடுவதால், காற்றில் பரவும் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும் என நம்புகின்றனர். அத்துடன், மஞ்சள் கரைசல் தண்ணீரையும் பஸ்சுக்குள் தெளித்துள்ளனர். பேருந்து ஓட்டுனர், நடத்துனரின் இந்த சமயோஜித செயலை பயணிகளும் வரவேற்றுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X