Advertisement

மதுரையில் கொரோனா: 'தனிமையில்' 550 பேர்

பொது மார்ச் 26,2020 | 00:00 IST

Share

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது கட்டட ஒப்பந்தக்காரர், கொரோனா வைரஸ் தாக்கத்தால், மார்ச்ச 24 ம் தேதி உயிரிழந்தார். இவர், மதுரையில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்துவதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த ஒன்பது பேரை, மதுரைக்கு அழைத்து வந்திருந்தார். அவர்கள் மூலம் கொரோனா தாக்கம் பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில், தாய்லாந்து நபர்கள் தேடப்பட்டு வந்தனர். மார்ச் 25 ம் தேதி, தாய்லாந்து நபர்கள், பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இருவர் மட்டும் கொரோனா அறிகுறியுடன் இருந்ததால், மதுரை அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X