Advertisement

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா யார் யார் முழுவிவரம்

பொது மார்ச் 30,2020 | 17:00 IST

Share

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இன்று 17 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு 67 ஆக உயர்ந்துள்ளதாக கூறினார். பைட் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் கொரோனோ பாதித்த 17 பேரின் விவரம் வருமாறு * ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர். ஏற்கனவே ஈரோட்டில் சிகிச்சை பெற்று வரும் இரு தாய்லாந்து நாட்டவரிடமிருந்து இந்த பத்து பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. * சென்னையில் 4 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர். *மதுரையைச் சேர்ந்த 25 வயது இளைஞர் * கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 42 வயது நபர். ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர் என முதல்வர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X