Advertisement

27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி

அரசியல் மார்ச் 30,2020 | 18:50 IST

Share

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பல தரப்பினருக்கு 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன்படி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரணம் கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 27. 5 லட்சம். அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகையை செலுத்த முதல்வர் யோகி உத்தரவிட்டார். 27.5 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 611 கோடி ரூபாய் திங்களன்று சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு தொழிலாளி வங்கிக்கணக்கில் 2200 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X