Advertisement

முழு சம்பளத்துக்கு முதல்வர் பொறுப்பு

பொது ஏப்ரல் 03,2020 | 17:00 IST

Share

கொரோனா ஊரடங்கால் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படாமல் அப்படியே வழங்கப்படும் என்றார் முதல்வர் பழனிசாமி அறிவித்தார் . ரேஷன் கடைகளில் இந்த மாதம் இறுதி வரை இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும். அதற்காக யாரும் ரேஷன் கடைகளில் ஒரே சமயத்தில் கூடாமல் இருப்பதை தவிர்க்க வீ டுகளில் டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வழங்கும் போதே கொரோனா நிவராண நிதியாக 1000 ரூபாய் கொடுப்பார்கள் வெளியூரில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம் . இந்த மாத இறுதிக்குள் ஊருக்கு திரும்பிய பின் இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம் . தமிழகத்தில் தங்கி இருக்கும் வெளிமாநில மக்களுக்கு தமிழக அரசு தங்குமிடம் வழங்கியுள்ளது . அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது . தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்தோம் . அவர் அதை பரிசலீப்பதாக கூறியுள்ளார் நாங்கள் இத்தனை நடவடிக்கைகளை மக்களுக்காக செய்து வருகிறோம் . ஆனால் 144 தடை உத்தரவை பலர் மீறுகின்றனர் , எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சிலர் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். நோயின் தாக்கத்தை மக்கள் உணர வேண்டும். இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழ் நிலையில் சமயத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X