Advertisement

கொரோனாவிடம் இருந்து இந்த நாடுகள் தப்பியது எப்படி?

பொது ஏப்ரல் 06,2020 | 14:28 IST

Share

யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு , உலகளவில் கொரோனா பரவி வருகிறது. தினம் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது . மருந்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழங்கின்றனர் . சீனாவில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது . ஜனவரி 12, 2020 நிலவரப்படி சீனாவை தாண்டி எந்த நாட்டிலும் கொரோனா இல்லை. ஆனால் சில நாட்களில் , சீனாவின் எல்லை பகுதி வரை பரவியது கொரோனா . வெள்ளம் பெருக்கெடுத்தது போல் கொரோனா அனைவரையும் தாக்கியது . அப்படியே சீனாவில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் மூலமாக செயின் ரியாக்ஷன் போல் மற்ற நாடுகளுக்கும் பரவியது. மூன்று மாதங்கள் ஆகிறது . ஆனால் உலகில் இன்னும் சில நாடுகளில் கொரோனா பரவவில்லை என்பது நல்ல செய்தி . இதை கண்டு பல வளர்ந்த நாடுகள் ஆச்சரியத்தில் உள்ளனர் . 6 கண்டங்களில் உள்ள 181 நாடுகளில் கொரோனா இதுவரை பரவியுள்ளது ஆனால் கொரோனா இல்லாமல் 18 நாடுகள் நிம்மதியாக உள்ளனர் . மைக்ரோனேசியா ; MICRONESIA பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் நாடு மைக்ரோனேசியா . 600க்கும் மேற்பட்ட தீவுகள் இந்நாட்டில் உள்ளது . சீனாவில் கொரோனா தொடங்கிய செய்தி கேட்டவுடனேயே , அந்த நாட்டில் ஹெல்த் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. நாட்டில் எல்லை பகுதிகளை மூடினர். விமான போக்குவரத்து முடக்கப்பட்டது . அந்த நாட்டில் தவிக்கும் வெளிநாட்டவர்களையும் , அரசே பார்த்துக்கொள்கிறது . SOLOMON ISLAND சோலோமன் தீவுகள் : இதுவரை இங்கு ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை. 900க்கும் மேற்பட்ட தனித் தீவுகளை உள்ளடங்கியது சோலோமன் தீவுகள் . இங்கு மக்கள் தொகை 6 லட்சம் தான். கொரோனா வந்தால் கூட யாருக்கும் எளிதாக பரவ முடியாத சூழ்நிலையில் . இருந்தாலும் அந்நாட்டு அரசு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை . அனைத்து பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூட தடை விதித்தது . பள்ளிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டது .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X