பொது ஏப்ரல் 06,2020 | 18:10 IST
நாடு முழுக்க 274 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களை மத்திய கேபினட் செயலாளர் ராஜிவ் கவுபா Rajiv gauba அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் 2ம் கட்டத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு மூன்றாம் கட்டத்தை அடைந்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். 144 தடை உத்தரவை அமல்படுத்த இரவுபகலாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வரும் 91,244 போலீசாருக்கு ஒரு நாளைக்கு தலா 250 ரூபாய் வீதம் ஏப்ரல் 30 வரை உணவுப்படி வழங்க 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக் காட்டி தமிழக போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு ஊரடங்கை 30 வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. இந்த வார இறுதியில் அறிவிப்பு வரலாம் என்று சொன்னார். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து