Advertisement

கொரோனா பாதித்த இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்

பொது ஏப்ரல் 07,2020 | 11:59 IST

Share

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது 10 நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்தபடியே அவர் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஒரு வாரத்துக்கு மேல் தீவிர சிகிச்சையளித்தும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காய்ச்சலின் தீவிரம் அதிகரித்தது. இதனால் ஞாயிறு இரவு அவர் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அட்மிட் ஆனவுடன் போரிஸ் ஜான்சன் ஒரு ட்வீட் போட்டார். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என மக்களுக்கு அட்வைஸ் செய்திருந்தார். அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமாகத் துவங்கியதால் உடனடியாக தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். இப்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. போரிஸ் ஜான்சன் உடல்நிலை மோசமானதை அடுத்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் dominic raab பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X