Advertisement

சிறப்பு தொகுப்புகள் » பணத்தை திருப்பி கொடு! விஜய்க்கு சசிகலா கெடு! ஏப்ரல் 07,2020 21:27 IST

சிறப்பு தொகுப்புகள் » பணத்தை திருப்பி கொடு! விஜய்க்கு சசிகலா கெடு! ஏப்ரல் 07,2020 21:27 IST

தமிழகத்தின் பிரதான நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது படங்கள் பூஜை போட்ட நாளில் இருந்தே, அதிக எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு தயாராகி விடும். இதனால், அவரை வைத்து படம் எடுக்க, பல தயாரிப்பாளர்களும் முன் வருகின்றனர். அவரை வைத்து நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் படமெடுக்க பலரும் தயாராக இருக்கின்றனர். இப்படித்தான், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் பிகில் படம் எடுக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்போடு உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட அந்தப் படம், முன்னூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு வசூலை வாரிக் குவித்தது என படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி அகோரத்தின் மகள் அரச்சனா, சமூக வலைதளம் மூலம் பதிவிட்டார். அதை வைத்தே, பின், வருமான வரித் துறையினர் நடிகர் விஜய், கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் தொடர்ச்சியாக சோதனை நடத்தினர். இதற்கிடையில், பிகில் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தினூடே, அடுத்து ஒரு படத்தை தயாரித்து, அதில் பெரும் பணம் பார்த்து விட வேண்டும் என முடிவெடுத்தார் நடிகர் விஜய். இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜய் கையாளும் தந்திரம்... தன்னுடைய மாமாவும், திரைப்படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவை அழைத்து, படம் தயாரிக்கச் சொல்லி விடுவார். பணம் வெளியாருக்கு போய் விடக் கூடாதே. அப்படி களம் இறக்கிவிடப்பட்ட சேவியர் பிரிட்டோ, இம்முறை ஒரு தந்திரத்தை கையாண்டார். கையில் இருந்து பெரிய அளவில் பணத்தை செலவு செய்யாமல், பூஜைப் போட்ட அடுத்தடுத்த நாட்களில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, படத்தை வாங்கி விநியோகிக்க பலரும் போட்டி போட்டனர். உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய பதிமூன்று விநியோகஸ்தர்கள் வரை தேர்வு செய்யப்பட்டனர். படம் எடுத்து முடிக்கப்படும் முன்னரே, அவர்களுக்கு விநியோக உரிமையளிக்கப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக பேசப்பட்ட தொகை முழுவதும் பெறப்பட்டது. கிட்டதட்ட 200 கோடி ரூபாய்க்கு, மாஸ்டர் என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்தப் படத்தை, உலகம் முழுவதும் விற்று விட்டார் சேவியர். இதை, படக் குழுவே பெருமையாக அறிவித்தது. விநியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டே, மாஸ்டர் படத்தை, சேவியர் பிரிட்டோ தயாரித்து முடித்தார். படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரை வைத்து, கடுமையான சண்டைக் காட்சிகளை ஹைதராபாத், சென்னை, நெய்வேலி சுரங்கம் ஆகிய இடங்களில் படமாக்கி முடித்தனர். கிட்டதட்ட படத்துக்கு நூறு கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், நடிகர் விஜய்க்கு மட்டும் எண்பது கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டது. இதை நடிகர் விஜய்யே, வருமான வரித் துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடொக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடக்கின்றன. இம்மாதம் 14ல் வரும் தமிழ் வருட பிறப்புக்கு முன், 9ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதற்கேற்ப, இசை வெளியீட்டு விழா, டீசர் வெளியீடு என நாள் குறித்து செயல்பட்டனர். இந்நிலையில்தான், கொரோனா வைரஸ் நோய் - சேவியர் பிரிட்டோ, நடிகர் விஜய் ஆகியோரின் கழுத்துக்கு எமனாக வந்திருக்கிறது. இருவரும் ஓடி ஒளியும் அளவுக்கு சிக்கல் தீவிரமாகி இருக்கிறது. உலகமே கொரோனா தொற்றுக்கு ஆளாகி, ஊரடங்கு உத்தரவால் முடங்கி இருக்கிறது. மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:25 வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

play button 01:19 15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

play button 02:40 சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

play button 00:48 பொழுது போக்க அனுமதியில்லை

பொழுது போக்க அனுமதியில்லை

play button 01:49 ராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்

ராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்

play button 04:59 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:59 தேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.

தேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.

play button 01:47 வீடியோவில் மணமக்களை வாழ்த்தலாம்

வீடியோவில் மணமக்களை வாழ்த்தலாம்

play button 02:58 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 06:29 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 04:47 நல்லோர் நட்பு

நல்லோர் நட்பு

play button 07:09 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:53 கொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்

கொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்

play button 01:16 பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு

பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு

play button :46 அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...

play button 01:00 பிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்

பிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்

play button 01:57 சேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்

சேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்

play button 04:56 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:12 50 கி லக்கேஜை அநாயசமாக தூக்குகிறார்

50 கி லக்கேஜை அநாயசமாக தூக்குகிறார்

play button 03:40 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X