Advertisement

ஏப் 14க்கு பிறகு இப்படித்தான் எல்லாம் நடக்கும்

பொது ஏப்ரல் 08,2020 | 13:00 IST

Share

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம்தேதி முடிகிறது. மார்ச் 25ம்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நம்நாட்டில் பெரியளவில் நோய் பரவவில்லை. சில நூறு பேரை மட்டுமே தொற்று பாதித்திருந்தது. மார்ச் 29ம்தேதிதான் இந்தியாவின் பாசிடிவ் கேஸ்கள் ஆயிரத்தை தாண்டியது. இப்போது, நோய் பாதிப்பு ஐந்தாயிரத்தையும் உயிர் பலி 150ஐயும் தாண்டி விட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதே கடந்த ஆறு நாட்களாக தினமும் 500க்கு அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினால் மக்களின் நடமாட்டத்தை அனுமதித்தால் அது சமூக பரவலுக்கு வழிவகுத்து விடும் நிலைமை கையை மீறிப் போய்விடும் என மத்திய அரசு மட்டுமல்ல பல மாநில அரசுகளும் கருதுகின்றன. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்ட்ராதான், ஊரடங்கை ஏப்ரல் 14ம்தேதிக்குப்பிறகும் நீட்டிக்க வேண்டுமென முதலில் குரல் கொடுத்தது. அடுத்தது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஊரடங்கு நீட்டிப்பை வலியுறுத்தினார். பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் அதற்கு ஆதரவளித்தன. டில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களும் லாக்டவுன் தொடர வேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளன. 14க்கு பிறகும் ஊரடங்கு தொடரும். என்பதை உறுதிப்படுத்தும் வகையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். பொருளாதார பாதிப்பைக்கூட பின்னாளில் சரிசெய்ய முடியும். உயிர் சம்பந்தமான விஷயத்தில் அப்படி இருக்க முடியாது. அதனால் அரசு எடுக்கும் சில கடினமான முடிவுகளுக்கு ஏப்ரல் 14க்குப் பிறகும் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென வெங்கய்யா நாயுடு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X