Advertisement

10 ல் 9 பேர் வீட்டிலேயே இருக்க ரெடி

பொது ஏப்ரல் 09,2020 | 18:43 IST

Share

ஏப்ரல் 14ம்தேதியுடன் ஊரடங்கு முடியுமா? அல்லது நீளுமா? பிரதமர் மோடி- 11ம்தேதி முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தும்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்து விடும். அதற்கு முன், மக்களின் மனநிலையை அறிய இன்ஷார்ட்ஸ் நிறுவனம் சர்வே நடத்தியது. 40,000 பேரிடம் மொபைல் ஆப் மூலம் கருத்து கேட்கப்பட்டது. ஊரடங்கை நீட்டித்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றனர், 88 சதவீதம் பேர். ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தீர்களா? என்ற கேள்விக்கு 88 சதவீதம் பேர் இல்லை என பதிலளித்தனர். கொரோனா டெஸ்ட் செய்ய இன்னும் நிறைய தனியார் லேப்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென 92 சதவீதம் பேர் சர்வேயில் கருத்து கூறினர். இதனிடையே, ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கை நீட்டிக்கும் முடிவில் பல மாநிலங்கள் இருந்தாலும் முதலில் அறிவித்தது ஒடிசாதான்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X