Advertisement

கொரோனா வார்டில் இருந்தவர் தற்கொலை

சம்பவம் ஏப்ரல் 11,2020 | 00:00 IST

Share

அரியலூர் மாவட்டம் கடம்பூர் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக, அரியலூர் வீட்டில் இருந்துள்ளார். காய்ச்சல் காரணமாக, அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் , கடந்த 6 ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 7 ம் தேதி, அவரது ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் , அவரைப் பார்க்க வந்த மனைவியுடன், தூரத்தில் இருந்த படியே பேசிய போது, வாய்த் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளே சென்ற அவர், வார்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். சளி, ரத்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டது. அரியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X