சம்பவம் ஏப்ரல் 12,2020 | 00:00 IST
டில்லி மாநாடு சென்று திரும்பியவர்களில் 17 பேர், திருச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர் 88 பேரின் ரத்தம், சளி மாதிரிகளை சோதனை செய்ததில், 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு பேர், 2 நாட்களுக்கு முன், அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஒருவர் மட்டும் வர மறுத்துள்ளார். சுகாதாரத்துறையினர், அவரது வீட்டுக்கு சென்று, சிகிச்சைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவர் மருத்துவமனைக்கு வர மறுத்ததுடன், தன்னை வரச்சொல்லி சுகாதாரத்துறையினர் கட்டாயப் படுத்துவதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், உறவினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நோயாளி, மருத்துவமனையில் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி, சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் மீது வீசியுள்ளார். அவருடன் வந்த நர்ஸ்கள் மீது எச்சிலை உமிழ்ந்துள்ளார். அவர்கள் தந்த புகாரின் பேரில், கொரோனா தொற்று நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து