Advertisement

தமிழகம் வாங்கும் சீனா டெஸ்ட் கிட் உண்மையை சொல்லுமா ?

பொது ஏப்ரல் 12,2020 | 18:45 IST

Share

கொரோனா தொற்றை 30 நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்க, 4 லட்சம் ராபிட் டெஸ்டிங் கிட் கருவிகள் தமிழகம் சீனாவிடம் ஆடர் செய்துள்ளது. சீனாவிடம் 1.5 லட்சம் ராபிட் டெஸ்டிங் கிட்டை வாங்கிய செக் குடியரசு அதில் 80% போலி என்று கண்டுபிடித்தது. போலியான கருவியை விட பொறுமையான கருவி மேல் என பி.சி.ஆர் முறையை தற்போது பயன்படுத்துவருகின்றனர். இதை பார்த்த ஜார்ஜியா, சீனாவிடன் கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்தது. ஸ்பெயில் கொரோனா அதிகரிக்க சீனாவின் மருத்துவ கருவிகளும் ஒரு காரணம். போலியான மாஸ்க், வெண்டிலேட்டர் மூலம் பலர் பலி ஆனார்கள். ஸ்பெயின் வாங்கிய 58,000 ராபிட் டெஸ்டிங் கிட்டில் 30% மட்டுமே உண்மையானது. இதனால் ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகள் சீனாவின் ஆர்டரை கேன்சல் செய்து, தென் கொரியாவிடம் பரிசோதனை கருவிகளை வாங்கியது. ஆஸ்திரேலியா, நெதர்லாந்து நாடுகள் சுமார் 14 லட்சம் முககவசங்கள், பரிசோதனை கருவிகளை சீனாவிடம் திருப்பிகொடுத்துள்ளது. பின்லாந்து மருத்துவர்கள் சீனா கருவிகளை பயன்படுத்த தகுதியற்றவை என நிரகரித்துவிட்டனர். சீனா பணத்திற்காக போலியான தரம் இல்லாதா பொருட்களை விற்பனை செய்வதாக பிரபல ஹாரிஸ் பிரிக்கின் சட்ட நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக சீன தரப்பு சொல்கிறது. ஆனால் இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் பல போலியான நிறுவனத்துடன் கூட்டணி வைத்து தரமான பொருட்களுடன் போலியான பொருட்களை கலந்து ஏற்றுமதி செய்கின்றனர். வாங்கும் நாடுகள் அனைத்து கருவிகளையும் சோதனை செய்யாது, சில சாம்பிள் கருவிகளை சோதனை செய்யும். தரமான கருவிகளை மட்டுமே சோதனை செய்ய வைப்பது இடைத்தரகர்களின் வேலை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X