Advertisement

'வெல்லமண்டி' நடராஜன்… இனி 'மாங்கா மண்டி' | Minister Vellamandi Natarajan | Covid 19 | Trichy | Dinamalar

'கோக்குமாக்கு' கோவாலு ஏப்ரல் 13,2020 | 00:00 IST

Share

திருச்சியில் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., குமார், ஊரடங்கு உத்தரவால் முடங்கிக் கிடக்கும் பொன்மலைப்பட்டி, திருவெறும்பூர் பகுதி மக்களின் வீடுகளுக்கு நேரா போய் காய்கறி வினியோகம் செய்யுறாரு. தி.மு.க., எம்.எல்.ஏ., நேருவோ, அரிசி மூடைகளை வழங்கிட்டு இருக்காரு. அ.ம.மு.க., சீனிவாசனும் தங்கள் கட்சி பங்குக்கு, நிவாரணப் பொருட்களை கொடுத்துட்டு வர்றாரு. அரிசி, பருப்பு, காய்கறி னு மக்கள் பசிதீர்க்க நிவாரணம் கொடுத்திட்டு இருக்குற நேரத்துல, நம்ம அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், செஞ்ச உதவி தான், திருச்சியில் இப்போ ஹைலைட். திருச்சி, பாலக்கரை மற்றும் வரகனேரி பகுதிகளுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் மாங்காய் லோடோட (load) போயிருக்காரு அமைச்சர். அங்க, போலீஸ் பாதுகாப்போட, மக்களை வரிசையா ரோட்டில் நிக்க வச்சிருக்காரு. ஆஹா… அமைச்சரும் நமக்கு ஏதோ நிவாரணம் தரப்போறாருனு ஆவலா, மக்கள் வரிசையில் நிக்கறப்போ… ஆளுக்கு ரெண்டு மாங்காய கொடுத்து, சந்தோஷமா அனுப்பி வச்சாரு. அரசு வழங்குற நிவாரண பொருட்கள், மக்களுக்கு முழுமையா கிடைக்குதானு ஆய்வு பண்ண வேண்டிய நேரத்துல, இவரு ஏன், இப்படி மாங்காய் கொடுக்குறாரு னு, அவரது அடிப்பொடிகளுக்கும், ஆளுங்கட்சியினருக்குமே புரியலயாம். இனி நம்ம அமைச்சர், இனிக்குற, வெல்லமண்டி இல்ல… புளிக்குற மாங்கா மண்டி நடராஜன் னு… மக்களும் சிரிச்சுகிட்டே, மாங்கா வாங்கிட்டு போனாங்களாம். இந்த வீடியோ தான், இப்போ சமூக வலைதளங்கள்ல டிரெண்டிங் ஆயிட்டு இருக்கு…


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

prasad
prasad , . 12-டிச-2020 | 15:53:59 IST Report Abuse

thanks

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X