பொது ஏப்ரல் 13,2020 | 14:55 IST
நம்மூரில் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி கிடப்பதைப்போல வடக்கே பான் மசாலாவுக்கு பலர் அடிமைகளாக உள்ளனர். இதை மாவா என்பார்கள். குஜராத்தின் மோர்பி morbi நகரைச் சேர்ந்த ரவி பதானியாவுக்கு பான் மசாலா தேவைப்பட்டது. அவரிடம் சொந்தமாக ஒரு ட்ரோன் உள்ளது. அந்த ட்ரோனை 100 மீட்டர் தொலைவில் உள்ள பான் மசாலா கடைக்கு அனுப்பினார். அதில் 2 பான் மசாலாவை கட்டி அனுப்பினார் கடைக்காரர் ஹிரேன். hiren. ரவி வசிக்கும் அபார்ட்மென்ட் மொட்டை மாடியில் பான்மசாலாவுடன் வந்திறங்கியது ட்ரோன். மாவாவை போட்டதும் ரவியின் மூளையில் ஒரு ஐடியா உதித்தது. ட்ரோன் பான்மசாலாவை கொண்டு வருவதை செல்போனில் படம்பிடித்து டிக் டாக் வீடியோ உருவாக்கினார். அந்த வீடியோ வைரலாக பலரும் தங்களுக்கும் பான்மசாலா சப்ளை செய்யும்படி ரவிக்கு ஆர்டர் கொடுத்தனர். ஊரடங்கு சமயத்தில் நல்ல பிஸ்னஸா இருக்கே என யோசித்த ரவி, பான்மசாலா கடைக்காரர் ஹிரேன் உதவியுடன் அதிக விலைக்கு போதை வஸ்துக்களை சப்ளை செய்தார். ட்ரோனுக்கு தனி சார்ஜ் வசூலித்தார். இந்த தகவல் உள்ளூர் போலீசுக்கு போனது. ரவி, ஹிரேன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து