Advertisement

ஏப்ரல் 20 பின் சில இடங்களில் தளர்வு : மோடி

பொது ஏப்ரல் 14,2020 | 12:37 IST

Share

மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் 19 நாட்கள் ஊரடங்கு தொடரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று இருக்கும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் வாரம் மக்கள் மேலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாதா இடங்களில் ஏப்ரல் 20க்கு பின் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம். கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்றார். சமூக இடைவேளி, மக்களின் ஒத்துழைப்பு மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. உரிய நேரத்தில் ஊரடங்கு அறிவிக்க வில்லை என்றால் இந்தியா நிலை மோசமாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது மற்ற நாடுகளை விட நாம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரோனாவை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் நம் நாட்டு ஆராய்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். முக கவசங்களை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தவும், ஆரோக்ய சோது ஆப் பயன்படுத்த கேட்டுக்கொண்டார். பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், உயிரிழப்பை தடுத்து வருவதாக தெரிவித்தார். ஊரடங்கு தொடர்பான விரிவான அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X