பொது ஏப்ரல் 14,2020 | 00:00 IST
கொரோனா தொற்று காரணமாக, திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு தினங்களாக அவருக்கு இதய துடிப்பு குறைந்து, மூச்சு திணறல் ஏற்பட்டு வந்த நிலையில் செவ்வாயன்று உயிரிழந்துள்ளார். டெல்லிக்கு சென்று வந்த அவரது மகன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது மகனும் கரூர் மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கரூர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த கரூரை சேர்ந்த 9 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா அறிகுறியால் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேருக்கும் ரத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இந்த 28 பேரையும், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கைகளை தட்டி உற்சாகத்துடன் அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து