பொது ஏப்ரல் 15,2020 | 19:07 IST
இந்தியாவில் 2600க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுடன் மகாரஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இறப்பு விகிதத்தில் 6.85%வுடன் உலகிலேயே முதல் இடம். அதிகமான இறப்புகளை சந்தித்த அந்த மாநிலத்தில், இறப்புக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அதில் கொரோனாவின் வைரஸ்சின் குணம், அதற்கான அறிகுறிகள் பற்றி முழுமையாக தெரியவில்லை என்றாலும். பாதிக்கபட்ட 85% முதல் 90% நோயாளிகளுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதல் பிரச்சனை இருந்தது. இதில் இறப்பு விகிதம் அதிகரிக்க ஹாப்பி ஹைபோக்சியா (Happy hypoxia) ஒரு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹாப்பி ஹைபோக்சியா என்றால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் உடலில் ஆக்சிஜன் அளவு 60%மாக குறைந்து விடும். இது சராசரி மனிதர்களை விட குறைவு. இது ஆரம்ப கட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தது, சாதாரண காய்ச்சல் போலவே இருக்கும். நோயாளிகள் பார்க்க இயல்பாக இருப்பார்கள். ஆனால் சிறது நேரத்திலேயே நோய் தாக்கம் அதிகரித்து ஆக்சிஜன் அளவு குறைந்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது. இந்த ஹாப்பி ஹைபோக்சியா எப்போது ஏற்படும் என கண்டுபிடிப்பது கஷ்டம் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிரித்து பேசிக்கொண்ட ஆரோக்கிய தோற்றத்துடன் இருந்த பலரும், சற்று நேரத்தில் உடல் நிலை மோசமாகி இறப்பதை கண் முன் பார்த்தோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆக்சிஜன் அளவு 90% மேல் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த நோயாளிகளும் துடிதுடித்து இறப்பதை பார்க்க முடிந்தாக மருத்துவ குழு தெவித்தனர்.
வாசகர் கருத்து