பொது ஏப்ரல் 19,2020 | 00:00 IST
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த 3 பெண்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பொள்ளாச்சியில் அதிகாரிகளுடன் கோவை கலெக்டர் ராசாமணி ஆலோசனை நடத்தினார். பின் பேசிய அவர், கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் இருந்தவர்கள் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்; கோவையில் சமூக தொற்று என்ற நிலை வரவில்லை என்றார்.
வாசகர் கருத்து