பொது ஏப்ரல் 19,2020 | 00:00 IST
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வீரம்பல் கிராமத்தில், சந்திரசேகர் என்பவர், மனைவி விமலா, இரு மகன்கள் கிளிண்டன் என்ற பால்ராஜ், நேசக்குமாருடன் வசிக்கிறார். குடும்பத்தினர் சேர்ந்து வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சி வந்ததாக புகார் எழுந்தது. போலீசார் வருவதை கண்ட தாயும் மகன்களும் தப்பி ஓடினர். 30 லிட்டர் கேன்களில் இருந்த சாராயத்தை அழித்த, இளஞ்செம்பூர் போலீசார் தப்பியோடியவர்களை தேடிவருகின்றனர். இதேபோல சேர்வைக்காரன் ஊரணியைச் சேர்ந்த கருணாகரனின் குக்கர் சாராயத்தை கைப்பற்றி கைது செய்தனர்.
வாசகர் கருத்து