Advertisement

வெளிய வந்தா போட்டு கொடுக்கும் மேப்

பொது ஏப்ரல் 20,2020 | 14:17 IST

Share

கொரோனா அறிகுறிகளோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சுகாதார அமைப்போடு இணைந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தனிமைப்படுத்தபட்டவர் பெயர் ,அவர் எத்தனை நாள் வீட்டில் இருக்க வேண்டுமென்பதை குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒன்று அவரது வீட்டின் கதவில் ஒட்டப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிலே இருக்கிறார்களா இல்லை வெளியே நடமாடுகிறார்களா என்பதை கண்காணிக்க போலீஸ் செக்யூரிட்டி போடப்பட்டுள்ளது. இது தவிர ஆன்லைன் வழியாகவும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவகளின் ஜி.மெயிலுடன் லொக்கேஷன் ஷேரிங் ஆக்டிவேட் செய்கின்றனர். கூகுள் மேப்பில் அவர்கள் இணைக்கப்படுவார்கள். இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடம், செல்லும் இடம் எல்லாம் போலீஸ் கூகுள் மேப் வழியே கண்காணிக்கிறது அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்த படியே கண்காணிக்க முடிகிறது . வெளியே யாராவது செல்வதை மேப் வழியே பார்த்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கின்றனர். ஒவ்வொரு வீட்டு வெளியே போலீஸ் பாதுகாப்பு போட முடியாத நிலையில் கூகுள் மேப் போலீஸ்க்கு உதவுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X