Advertisement

கொரோனாவுக்கு நன்றி கூறும் கவிஞர்

பொது ஏப்ரல் 20,2020 | 18:40 IST

Share

வசதியில்லா வீட்டுப் பெண் வயசுக்கு வந்ததுபோல் சினுங்காமல் வந்துவிட்டாள் சித்திரை திருமகள் 💥 மனிதன் செய்த செயற்கை தவறுகளுக்கு தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது இயற்கை🧚‍♂ அசுத்தம் கொட்ட மனிதர்கள் இல்லையே அழுக்கு தேய்த்து குளித்து கொண்டது கங்கைநதி🏊‍♂ கூட்டம் போட கட்சிகள் இல்லையே கோடம்பாக்கத்தில் ஊர்வலம் போயின குயில்கள்😍 கூச்சல் போடும் வாகனம் இல்லையே கோயம்பேட்டில் டூயட் பாடின குருவிகள்💗 பகலெல்லாம் பிள்ளைகளை சிரிக்க வைக்க வடிவேலு😁 இரவெல்லாம் இதயங்களை உறங்க வைக்க இளையராஜா🎸 வீட்டுக்குள்ளேயே வாழ்வது ஒன்றும் அத்தனை கடினமில்லை சூழலும் பம்பரத்தை கையில் ஏந்தி காட்டி, கோலி குண்டுகளை குறி வைத்து அடித்து காட்டி, காரம் தூக்கலாக கறி குழம்பு செய்து காட்டி 'அப்பா சூப்பர் பா' என குழந்தையிடம் வாங்கிய பட்டம் 1000 apraisalகளுக்கு சமம்🏆 வீடு கிடக்கட்டும் நாடு என்ன செய்கிறது? சட்டம் தராத பயத்தை சாவு தானே தருகிறது🌚 தலைக்கவசம் அணியாத மூடர்களை முகக் கவசம் அணிய வைத்த முற்போக்குவாதி இந்த Corona✳ இளசுகள் மூளையை கழுவி சண்டைகள் மூட்டும் சாதி சங்கமுட்டாள்களின் கைகளை முதலில் கழுவ சொன்ன மருத்துவன் இந்த Corona👨‍🔬 இந்த தேசத்தில் இரண்டு மக்கள்தான். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு எதை செய்யலாம்? அடுத்தவேளை சாப்பாடு இல்லையே என்ன செய்யலாம்? பால் கொண்டு Dolgona காபி எப்படி செய்வது? பாலுக்கு அழும் குழந்தைக்கு சமாதானம் எப்படி செய்வது? இருவருக்கும் சேர்த்தே பிறந்துள்ளது சித்திரை திருநாள்😎 தெய்வங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவமனையில்👨‍⚕ ஒவ்வொரு தெருவையும் காத்து நிற்கிறார் காக்கிச் சட்டையில் மூடப்படாத மளிகை கடையின் ஒவ்வொரு அரிசியிலும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். மனித இனமே நினைவு சின்னங்களில் மட்டும் இல்லை கடவுள். குப்பை அள்ளும் கரங்களில், தண்ணீர் கேன்போடும் வாகனங்களில், விதைப்பை நிறுத்தாத விவசாயியின் வியர்வையில், விலையேற்றம் செய்யாத வியாபாரி நேர்மையில், குழந்தைகள் கொஞ்சும் மொட்டை மாடியில், நலம் விசாரிக்கும் நண்பனின் குரலில்❤ எங்கெல்லாம் நம்பிக்கை வேர் உள்ளதோ அங்கெல்லாம் கடவுளின் பேர் உள்ளது. இன்றோ நாளையோ நோய்க்கு மருந்து வரும் ஊரடங்கு முடிந்துவிடும். வீட்டில் இருந்து விடுதலை அடையும் திருநாளில் என்ன செய்வேன் நான்? மால்களுக்கு ஓடமாட்டேன் மந்தையாக மாற மாட்டேன் ஆழமாய் தினம் மூச்சு எடுப்பேன் அன்னையிடம் பேச்சுக் கொடுப்பேன்🤰 அன்றாட சுமைகளில் மனைவிக்கு தோள் கொடுப்பேன் மனிதகுலம் சார்பாக மருத்துவர்களுக்கு கை கொடுப்பேன்🥰 சில்லறைகள் மட்டுமல்ல சிரிப்புகளும் சேகரிப்பேன் தொல்லைகள் தந்தாலும் பிள்ளைகளை காதலிப்பேன்👶 புத்தாண்டோ பிறந்தநாளோ தேவையில்லை உயிரோடு வாழ்கின்ற ஒவ்வொரு நாளையும் கொண்டாடுவேன்🥳 வாகனத்தில் செல்லும்போது வீதியிலே சாமி கண்டால் கையெடுத்து வணங்குதல் போல் காவிரி வைகை தாமிரபரணி நெடுஞ்சாலை நெடுக நிரம்பிய இயற்கையை கையெடுத்து கும்பிடுவேன்🗻 கோடையிலும் கொஞ்சமாக கொட்டிபோன மழையின்பின் கையளவு மண் எடுத்து கன்னத்தில் பூசிக் கொண்டு கண்ணீரில் சிரித்தபடி உரக்கச் சொல்வேன் உலகிற்கு "நண்பா.. வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?"


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X