Advertisement

அவசர சட்டம் தயார்

பொது ஏப்ரல் 22,2020 | 20:20 IST

Share

அவசர சட்டம் தயார் கொரோனா தடுப்புப் பணிக்காக வீடு வீடாக சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப்பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. சரியாக சிகிச்சையளிக்கவில்லையென டாக்டர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்குவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஒரு லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும். இதற்காக, தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X