Advertisement

கலெக்டர் ஆபிசில் கொரோனா பயமில்ல?

பொது ஏப்ரல் 24,2020 | 00:00 IST

Share

மதுரையில் கொரோனாவுக்கு இருவர் பலியான நிலையில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து புதிய திட்டத்தை அறிவித்தன. இதன்படி, ஏப். 25 முதல், வாகனங்களில் செல்வதற்கு கியூ ஆர் (QR code) கோடு உள்ள அடையாள அட்டை பெற வேண்டும் என்று மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வெளியே வருகின்ற அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து கடுமையான அபராதம் விதிக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கியூ ஆர் கோடு அட்டையை பெறுவதற்கு வெள்ளியன்று ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனால், காலை முதலே, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. அனைவரும் உயிர் பயத்தில் மாஸ்க் அணிந்திருந்தாலும், அடையாள அட்டை பெறுவதற்கு முண்டியடித்தனர். மதுரையில் கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், பாஸ் பெற வந்தவர்களின் கூட்டத்தைப் பார்த்து அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். யாருக்கும் அடையாள அட்டை வழங்க முடியாமல் தவித்தனர். இதற்கிடையே க்யூ ஆர் கோடு அடையாள அட்டை முறை தவிர்க்கப்பட்டு பழைய நடைமுறையே தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனை அடுத்து கூடி இருந்த கூட்டத்தினர் கலைந்து சென்றனர். திட்டமிடல் இல்லாமல் ஒரே நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய பெருங்கூட்டம், மீண்டும் சமூகப்பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X