Advertisement

அடங்கிய நேரத்தில் முடங்காத ஆர்.டி.ஐ

பொது ஏப்ரல் 27,2020 | 16:10 IST

Share

மத்திய பிரதேசத்தில் உள்ள காட் கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா என்பவர் ஒரு சமூக ஆர்வலர். கொரோனா பரவும் நேரத்தில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் காட் கிராமத்தில் பலர் தங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் எழுப்பினர். இதனால் தன்னுடைய கிராமத்தில் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் அன் யோஜானா திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வழங்கும்படி ஆர்.டி.ஐக்கு ஏப்ரல் 23 ,இரவு 9.30 மணிக்கு இ மெயில் அனுப்பினார் ராகவேந்திரா. அடுத்த நாள் காலை 9 மணிக்கு, உணவு கட்டுபாட்டு தலைவர் ராஜேந்திர சிங்கிடமிருந்து வாட்ஸ் ஆப்பில் அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது . காட் கிராமத்தில் ரேஷனில் இருந்து 2 ஆயிரத்து 275 பேருக்கு 11 ஆயிரத்து 375 கிலோ அரசி வழங்கப்பட்ட வேண்டும். ஆனால் இரண்டு மாதங்கள் அது கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கபட்டிருந்தது. ஒருவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற விண்ணப்பம் செய்தால் 30 நாட்களில் பதில் கிடைக்கும். பல மாதங்கள் தாமதமாக கூட பலருக்கு பதில் கிடைத்துள்ளது. ஆனால் 12 மணி நேரத்தில் ராகவேந்திரனுக்கு பதில் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தார். விபரங்கள் தெரிந்தப்பின் மக்களுக்கு ரேஷன் வழங்கவதற்கு நடவடிக்கை எடுத்தார். இதற்கு முன் மாநில தகவல் ஆணையம் ரேஷன் குறித்த தகவல்களை கேட்ட போது , உணவு கட்டுப்பாடு தலைவர் விபரங்களை தாமதமாக தெரிவித்தார். அதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது ஆர்.டி.ஐ கேட்ட விவரங்களை உடனே சமர்பித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X