Advertisement

கல்லூரியில் தற்காலிக சிறை

பொது ஏப்ரல் 28,2020 | 00:00 IST

Share

புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில், தண்டனை, விசாரணை கைதிகள் என 250க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக முக்கிய குற்றவாளிகள் மட்டும் அடைக்கப்பட்டு, விசாரணை கைதிகள் அனைவரும் பரோலில் விடுவிக்கப்பட்டனர். புதிய குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்போது வைரஸ் தொற்று பயம் இருந்ததால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் அரசுடன் ஆலோசித்தது. தற்போது புதுச்சேரி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறைகள் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளியில் இருந்து 6 அறைகளும், கல்லூரியில் இருந்து 6 அறைகளும் கைதிகளின் அறைகளாக மாற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X