Advertisement

சட்டசபையில் அமைச்சர் தர்ணா

பொது ஏப்ரல் 29,2020 | 00:00 IST

Share

புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 1பெண் உட்பட 14தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த நிலையில் ஊரடங்கால், 800 கி.மீ நடந்தே சொந்த ஊரானா ஏனாம் திரும்பினர். அவர்கள் அந்திரா- ஏனாம் எல்லையில் நிறுத்தப்பட்டனர். அவர்களை 24 மணி நேரத்திற்குள் அனுமதிக்கவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டல் விடுத்தார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ். மத்திய உள்துறை அமைச்சகம், 14 தொழிலாளர்களையும் ஊருக்குள் அனுமதித்து தனிமைபடுத்த உத்தரவிட்டும் இதுவரை அனுமதிக்கபடவில்லை. தொழிலாளர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தியதை கண்டித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கருப்பு சட்டையுடன் சட்டசபை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவர்களை ஊருக்குள் அனுமதிக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X