பொது ஏப்ரல் 29,2020 | 21:11 IST
தமிழத்தில் இன்று மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் ஆண்கள், 41 பேர் பெண்கள். சென்னையில் 94 பேர் செங்கல்பட்டில் 4 பேர் காஞ்சிபுரத்தில் 3 பேர், விழுப்புரத்தில் 2 பேர் திருவள்ளூரில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்தது. இதில் தலைநகர் சென்னையின் பங்கு மட்டும் 768. கோவை 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 80, மதுரை 79, செங்கல்பட்டு 73. இன்று இருவர் இறந்ததால் தமிழகத்தின் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது 82 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் இதனால் தமிழகத்தில் வீடு திரும்பியவர் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்தது.
வாசகர் கருத்து