Advertisement

டாக்டருக்கு வைரஸ் பாதிப்பு

பொது ஏப்ரல் 30,2020 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த டாக்டர், விழுப்புரம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். இதனால், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால், திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், குடும்பத்தை காணும்ஆவலில், கிருஷ்ணகிரி வீட்டுக்கு வந்து, சில தினங்கள் தங்கிவிட்டு மீண்டும் பணிக்கு சென்றார். அப்போது, அவருக்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவரான மனைவியும், கணவர் வந்து சென்ற பின்பு பணிக்கு சென்றுள்ளார். கிருஷ்ணகிரியில் இதுவரை வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையில், தற்போது முதல் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X