பொது மே 02,2020 | 20:10 IST
ஊரடங்கு காரணமாக, சென்னையில் வேளச்சேரி, பெருங்குடி, கிண்டி, முகப்பேர், கவுல் பஜார் உள்ளிட்ட பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலையில்லாமல் இருக்கும் அவர்களிடம் பணமும் இல்லை. சாப்பாடும் சரிவர வழங்குவதில்லை என தொழிலாளர்கள் சொல்கின்றனர். இதனால் பல்லாவரம் அடுத்த கவுல் பஜாரில் ஆயிரத்துக்கு அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு ரயில்களில் தங்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து