Advertisement

அமெரிக்க உளவு துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

பொது மே 04,2020 | 16:41 IST

Share

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியே தெரிவித்துள்ளார். கொரோனா மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்ற அமெரிக்க உளவுத்துறை கூறும் கருத்தில் நான் முரண்படவில்லை ஆனால் வூகான் ஆய்வகங்களில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கிறது. பல சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனா மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனத்தெரிவிக்கிறார்கள். வூகான் ஆய்வகங்கள் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இல்லாதவை, தரம் குறைந்தவை, போதுமான அளவு சுத்தம் இருக்காது. இந்தக் காரணங்களால் வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம் என்றார். மேலும் அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை 4 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளது. அதில் சீனா கொரோனா வைரஸ் தன்மையை தெரிந்து திட்டமிட்டே உலகிற்கு மறைத்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவுக்கான மருந்தும் சீனாவிடன் இருக்கிறது. கொரோனா பாதிப்பை ஜனவரி மாதம்தான் சீனா வெளியுலகிற்குத் தெரிவித்தது. கொரோனா வைரஸ் ஆபத்து குறித்து பேசிய மருத்துவர்களைக் கட்டுப்படுத்திய சீனா அதை உலகிற்குத் தெரிவிக்கத் தாமதப்படுத்தியது' எனத் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X