Advertisement

மும்பை நோயாளிக்கு செலுத்தி பரிசோதனை

பொது மே 04,2020 | 16:43 IST

Share

மும்பையிலுள்ள கெம் மருத்துவமனையில் இன்னொரு புதிய முயற்சியை டாக்டர்கள் துவங்கியுள்ளனர். சோரியாசிஸ் தோல் வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு இடோலிசுமாப் Itolizumab என்ற ஊசிமருந்து மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மருந்தை பெங்களூரைச் சேர்ந்த பயோகான் நிறுவனம் தயாரிக்கிறது. இடோலிசுமாப் மருந்தில் சற்றே மாற்றம் செய்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சி மூலம் பயோகான் உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நோயாளிகள் உடலில் மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் கிளினிகல் ட்ரயல் துவங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை கெம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லாரி டிரைவருக்கு இடோலிசுமாப் ஊசி மருந்தை நரம்பு மூலம் டாக்டர்கள் செலுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X