Advertisement

சென்னை குடிமகன்களுக்கு பெரும் ஏமாற்றம்

பொது மே 05,2020 | 14:25 IST

Share

பல மாநிலங்களில் மதுக்கடைகள் திங்களன்று திறக்கப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் மே 7 ம்தேதி திறக்கப்படுமென தமிழக அரசு அறிவித்தது. டில்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் முன் கிலோ மீட்டர் நீளத்துக்கு கியூ வரிசை நீண்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மதுப்பிரியர்கள் முண்டியடித்தனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற நிலை ஏற்பட்டதால் டில்லி கரோல் பாக்கில் உள்ள சில மதுக்கடைகளை மூட போலீஸ் உத்தரவிட்டது. மகாராஷ்ட்ராவில் மதுக்கடைகள் முன் கூட்டம் முண்டியடிப்பதைக் கண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா தீவிரமாக பரவுமோ என கவலையில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் 7 ம்தேதி திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் சென்னையை ஒட்டியிருப்பதால் சென்னையைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் அந்த -மூன்று மாவட்டங்களுக்கு ஓடுவார்கள். இதனால் குழப்ப நிலை உண்டாகும். சமூக இடைவெளி காணாமல் போகும் என்பதால் அந்த மூன்று மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறப்பது கேள்விக்குறிதான் எனவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X