Advertisement

கோச்சிங் சென்டரை தவிர்க்க அறிவுரை

பொது மே 05,2020 | 18:30 IST

Share

மே 3ம்தேதி நடக்கவிருந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதத்துக்கு ஒத்திபோடப்பட்டது. ஜூலை 26ம்தேதி நீட் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 10 நாட்களுக்கு முன் வழங்கப்படும் என்றும் பொக்ரியால் கூறினார். இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகள் ஜூலை 18 முதல் ஜூலை 23ம்தேதி வரை நடக்கும். ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழலை கருதி பயிற்சி நிலையங்களுக்கு செல்லாமல் சொந்தமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஸ்வயம், தீக் ஷா ஆன்லைன் உள்ளிட்ட ஆன்லைன் கோர்ஸ்கள் மூலமும் மாணவர்கள் தயாராக வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X