பொது மே 06,2020 | 06:30 IST
தெலங்கானாவில் 17 ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்ட ஊரடங்கு உத்தரவை 29 வரை நீட்டிப்பதாக முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். ஐதராபாத், ரங்கா ரெட்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார். 25 பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் இன்று கடைகள் திறக்கப்படுகிறது. கிராமங்களில் எல்லா கடைகளும் இயங்கலாம்.நகரங்களில் பாதி கடைகள் மட்டுமே திறக்க அனுமதி. மாலை 6 மணிக்குள் மக்கள் வீட்டுக்கு போய்விட வேண்டும். இரவு 7 முதல் காலை 6 வரை முழு ஊரடங்கு அமலாகும் என்றார்.
வாசகர் கருத்து