Advertisement

இந்தியா முதலில் தயாரிக்குமா?

அரசியல் மே 06,2020 | 07:28 IST

Share

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு குறித்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. ஆரம்ப கட்ட தடுப்பூசி ஆராய்ச்சியில் இந்திய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்துடன் இறங்கியுள்ளன. 30 க்கு மேலான முயற்சிகள் வெவ்வேறு கட்டங்களை எட்டியுள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதில் மூன்று அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தற்போதுள்ள மருத்துகளை மறு பயன்பாடு செய்வது ஒரு வழி. இந்த பிரிவில் 4 மருந்துகள், தொகுப்பு, பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளன. அடுத்து புதிய மருந்துக்கான மூலக்கூறுகளின் வளர்ச்சியை ஆய்வு செய்து அதன் அதிகபட்ச செயல்திறனை கணக்கீடுவது> இறுதியாக பொதுவான வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்கு தாவர சாறு உள்ளிட்ட தயாரிப்புகள் ஆராயப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களை இணைத்ததன் மூலம், பி.சி.ஆர் சோதனை மற்றும் ஆன்டிபாடி கண்டறிதலுக்கான திறன் அதிகரித்துள்ளதாக கூட்டத்தில் திருப்தி தெரிவிக்கப்பட்டது. கணினி அறிவியல், வேதியியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகள் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்படுவதை பிரதமர் பாராட்டினார். இந்தியா இந்த முயற்சியில் சாதிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X