Advertisement

தொலைத்த 20,000 தொட ஆள் இல்லை

பொது மே 06,2020 | 13:27 IST

Share

பீகார் ஆட்டோ டிரைவர் கஜேந்திரா ஷா, வீட்டு வளாகத்தில் டின் ெஷட் அமைக்க முடிவு செய்தார். 20,500 ரூபாயுடன் பஜாருக்கு புறப்பட்டார். பிறகுதான் பார்த்தார். பாக்கெட்டில் பணம் இல்லை. பயங்கர அதிர்ச்சி. பான் மசாலாவை எடுத்து வாயில் போடும்போது பணம் விழுந்திருக்கலாம் என்பதை உணர்ந்தார். வந்த வழியே நடந்தார். பணம் கிடைக்கவில்லை. விரக்தியுடன் வீட்டுக்கு போனார். கவலையுடன் ஃபேஸ்புக்கை ஓபன் செய்தார். தெருவில் ரூபாய் நோட்டுகளை போட்டு கொரோனா வைரசை பரப்ப சதி என்ற வாசகத்துடன் ஒரு போட்டோ ேஷர் செய்யப்பட்டிருந்தது. கஜேந்திராவுக்கு சந்தோஷம். அது அவர் தவறவிட்ட பணம். பணத்தை தொட மக்கள் பயந்ததால் போலீசார் கைபடாமல் எடுத்து சென்றதாக பதிவில் குறிப்பிட்டிருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X