Advertisement

ஏழை பெண் கோவை செல்ல உதவி

பொது மே 06,2020 | 00:00 IST

Share

மதுரை வாடிப்பட்டி அடுத்த காடுப்பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன். சென்னை பெண் அஞ்சலி தேவியை காதலித்து மணந்தார். இரு குடும்பங்களும் கைவிட்டதால், கோவை சூலுார் பள்ளக்கோரையில் வெல்டிங் ஒர்க் ஷாப் அமைத்து அங்கேயே குடியிருந்தனர். 7 வயது, 6 வயது, 3 மாதம் என 3 ஆண் குழந்தைகள். ஏப்ரல் 1 ஆம் தேதி முனீஸ்வரன் மாரடைப்பால் இறந்தார். சொந்த ஊரில் சாக விரும்பிய அவரது சடலத்துடன் மதுரை வந்தார் அஞ்சலி. கணவரின் பெற்றோர் இல்லாததால், அவரது சகோதரி உதவியுடன் அடக்கம் செய்தார். ஊரடங்கால் கோவை திரும்ப முடியாமல் 3 குழந்தைகளுடன் ஒரு மாதமாக அங்கேயே தங்கினார். வறுமை வாட்டியது. ஆட்டோ டிரைவர் தவமணி உதவ வந்தார். மதுரை கலெக்டர் வினயிடம் அழைத்து சென்றார். செஞ்சிலுவை சங்கத்தில் சொல்லி அஞ்சலியை கோவைக்கு காரில் அனுப்பி வைத்தார் கலெக்டர். ஒரு மாத அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X