Advertisement

பாதிப்பு திடீரென கூடலாம்; பீதி வேண்டாம்

பொது மே 09,2020 | 13:25 IST

Share

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1981 பேர் பலியாகியுள்ளனர். இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டாக்டர் டேவிட் நபரோ David Nabarro கூறியதாவது: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகம்தான். நாட்டின் மக்கள் தொகை 138 கோடி. இதைப் பார்க்கும்போது 60,000 பாசிடிவ் கேஸ் மிகவும் குறைவுதான். லட்சத்தைக்கூட தொடவில்லை. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியது பாதிப்பு குறையக் காரணம். பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. சென்னை, மும்பை, டில்லி, ஆமதாபாத், இந்தூர் போன்ற சில நகரங்களில் மட்டும்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஊடரங்கை தளர்த்தியதும் பல பகுதிகளில் பாசிடிவ் கேஸ்கள் திடுதிப்பென அதிகரிக்கும்; மக்கள் பயப்பட வேண்டாம்; நோய் பாதிப்பு ஜூலையில் உச்சத்துக்கு சென்று பிறகு கட்டுக்குள் வந்து விடும், இந்தியாவில் 30 சதவீதம் பேர் குணமடைந்திருப்பதும் நல்ல விஷயம்தான் என்றார், டாக்டர் நபரோ.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X