Advertisement

ஊர் திரும்ப விடாததால் ஆத்திரம்

சம்பவம் மே 09,2020 | 17:25 IST

Share

ஊரடங்கைத் தொடர்ந்து மார்ச் 25 முதல், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலையின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டது. இங்கு எல் அன்ட் டி நிறுவனத்தின் மூலம் வேலை பார்த்து வந்த 3000க்கும் மேற்பட்ட வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களை, நிலைய வளாகத்திற்குள்ளேயே டெண்ட் அமைத்து, நிறுவனம் தங்க வைத்தது. ஆனால் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியாக செய்யவில்லை என்று கூறிய தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென, மே 4ம் தேதி, அணுமின் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பெயர் விபரங்களை பதிவு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால், போராட்டத்தை கைவிட்டனர். தற்போது வரை, நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஆண்டனிஜெகதா தலைமையில் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். தீர்வு கிடைக்காமல், சமாதானம் செய்து வைப்பதாக ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், கம்பு மற்றும் கற்களால் போலீசாரை தாக்கினர். இன்ஸ்பெக்டர் ஆண்டனிஜெகதாவும், காவலர் சக்திவேலும் கல்வீச்சில் காயம் அடைந்தனர். இருவரும் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ், எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் மீண்டும் பேச்சுவாத்தை நடத்திவருகின்றனர். பதட்டத்தை தணிக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X