Advertisement

இந்து மத சர்ச்சையில் மீண்டும் சிக்கினார்

பொது மே 10,2020 | 08:28 IST

Share

விளம்பரத்துக்காக அல்லது விவரம் இல்லாததால் இந்து மதத்தை கேலி செய்யும் நடிகர்கள் கோஷ்டியில் புது உறுப்பினராக சேர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான ஒரு செய்முறை விளக்கம் இடம்பெற்று இருக்கும். அதில் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வஙக்ள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்கள் உடைமாற்றும் நிகழ்வை காட்டக்கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதை போல் கற்பனையாக ஒரு கதையை சொல்வார். இது இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும், இந்துக்களின் மனதையும் புண்படுத்துவதாக இந்து மகா சபாவினர் புகார் கொடுத்துள்ளனர். கடவுள் எதிர்ப்பு கொள்ளை என்ற பெயரில் இந்து மதத்தை இழிவு படுத்தி அதில் கிடைக்கும் சுய விளம்பரத்தை லாபமாக்கும் கூட்டத்துடன் விஜய்சேதுபதி இணைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X