பொது மே 10,2020 | 00:00 IST
ஒட்டகத்தின் குட்டிபோல் இருக்கும் லாமா விலங்குகளின் பிளாஸ்மாக்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெல்ஜியத்தில் வின்டர் என பெயரிடப்பட்ட 4 வயது லாமாவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். லாமாவின் நோய் எதிர்ப்பு சக்தி வைரசை செயலிழக்கச் செய்து மேலும் பரவமால் கட்டுப்படுத்தியது. மனிதர்களை போலவே லாமாவின் நோய் எதிர்ப்பு சக்தி ஒரே மாதிரி இருப்பதால் இவற்றை மனிதர்களுக்கு செலுத்தும் போது பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தனர் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் கொடுத்த பிளாஸ்மக்கள் தீர்ந்து போனால் லாமாவின் பிளாஸ்மாக்கள் பயன்படுத்தலாம். கொரோனா பாதிக்காதகவருக்கும் இதை முன்பே செலுத்தினால் கொரோனா வராமல் கட்டுப்படுத்தலாம். தடுப்பு மருந்துகள் கிடைக்கும் வரை இதை பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள் லாமாவின் நோய் எதிர்ப்பு சக்தி சார்ஸ் மற்றும் மெர்ஸ் நோய்களை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது
வாசகர் கருத்து